தொடர் - 01
அனைவரையும் கூகுள் போர்ம் தொடர் வழிகாட்டல் கட்டுரைக்கு வரவேற்கின்றேன்.
கூகுள் போர்ம் தொடர்பாக நாம் அறிந்திருக்க வேண்டிய விடயங்களை தொடர்ச்சியான கட்டுரை வழிகாட்டலை பின் தொடர்ந்து தற்கால சூழ்நிலைக்கேற்ப உங்களை தொழில்நுட்ப ரீதியாக மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் அந்த வகையில் பின்வரும் விடயங்களை நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.
இலவசம் (கூகுல் ஐடி ஒன்று வேண்டும் - இதுவும் இலவசமாக திறக்கலாம்)
அனைவரும் பயன்டுத்தக்கூடிய வகையில் இலகுவாக உருவாக்கப்பட்டுள்ளது.
கூகுள் போர்ம் மூலம் எங்கள் நிருவாக செயற்பாடுகள் மற்றும் கற்றல் கற்பித்தலிற்குத் தேவையான என்னென்ன விடயங்களை மேற்கொள்ள முடியும்
தகவல் திரட்டல் ( ஆசிரியர் மாணவர் தொடர்பான தகவல்கள்)
நிகழ்நிலைபரீட்சைகளை நடாத்துதல் - பரீட்சை முடிவில் உடனடியாக புள்ளிகளை வழங்க முடிதல், சான்றிதழ்களை வழங்க முடியாதல். இதன் மூலம் மாணவர்களை ஊக்கப்படுத்தலாம்.
நிகழ்நிலை பரீட்சைகளை உரிய திகதியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கக்கூடிய வகையில் மேற்கொள்ள முடிதல்.
வழங்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் தொடர்பாக அவர்களுக்கு விளக்கம் அளிக்க முடியும்.
வினாக்களை பல்வேறுவிதமான வடிவத்தில் உருவாக்க முடிந்தல்.
Text
Paragraph Text
Multiple Choice
Checkboxes
Choose from a list
Scale
Grid
Date
Time
பெற்றுக்கொள்ளப்படும் தரவுகள் தகவல்களை விரிதாள் கோப்பு (Excel File) வடிவத்தில் பெற்றுக்கொள்ள முடிந்தல். இதனால் தரவுகளை மீண்டும் விரிதாள் கோப்பில் உள்ளிடும் நேரத்தை சேமிக்க முடியும்.
கூகுள் போர்ம் தயாரிக்கப்படும் படிவங்களை அதில் சேமிப்பதற்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றது இதனால் எந்த நேரத்தில் எந்த இடத்திலும் இணையத்துடன் தொடர்பு படக்கூடிய சாதனத்தை பயன்படுத்தி படிவங்களை தயாரிக்கவும் அதனை மீள் திருத்தவும் முடியும்.
சக ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து நிர்வகிக்க முடியும்.
பின்வரும் தொடர்ச்சிகளை எதிர்பாருங்கள்……………….
தொடர் - 02
கூகுள் போர்ம் மூலம் பரீட்சை ஒன்றை எவ்வாறு உருவாக்குவது?
தொடர் - 03
கூகுள் போர்ம் மூலம் எவ்வாறு பரீட்சை ஒன்றுக்கு திகதி மற்றும் நேர வரையறை கொடுப்பது?
தொடர் - 04
கூகுள் போர்ம் தொர்பான மேலதிக தொழிநுட்ப விடயங்கள்?
0 Comments